நவம்பர் இறுதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யலாம்

திருப்பூர், செப். 11:அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2020-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை  தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2020 தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில், வாக்காளர் பட்டியலை எவ்விதமான தவறும் இல்லாத வகையில் செம்மைப்படுத்தும் பொருட்டு,  முன் திருத்தப்பணியாக கடந்த 1ம் தேதி முதல் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இப்பணி வரும் 30ம் தேதி வரை நடைபெறும். வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின் படி வாக்காளர்கள் தங்களது பெயர் விவரங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விவரங்களை www.nvsp.in, பொது இசேவை மையங்கள், மாவட்ட தொடர்பு மைய கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 உட்பட பல்வேறு வசதிகள் மூலம் தாங்களாகவே சரிபார்த்துக்கொள்ளலாம்.மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் பூர்த்திசெய்யப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தும் சரிபார்த்துக்கொள்ளலாம்.

Advertising
Advertising

மேலும் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலத்தில், பொதுமக்கள் தாமாக முன்வந்து இந்திய கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, அரசு அடையாள அட்டை, வங்கி, அஞ்சல் அலுவலகக் கணக்கு புத்தகம், உழவர் அடையாள அட்டை உட்பட பல்வேறு ஆவணங்களில் ஏதேனுமொன்றை அளித்தும், இணையதளம் அல்லது அலைபேசி செயலியில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து  பதிவேற்றம் செய்தும் தங்களது பெயர் விவரங்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.மேலும், வாக்காளர் சரிபார்ப்பு பணி வரும் 30ம் தேதி நிறைவடைந்ததும், வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 15ம் தேதி வெளியிடப்படும்.

அதன்பின்னர் நவம்பர் 30ம் தேதி வரை, பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வதற்கான மனுக்களை அளிக்கலாம். மேலும் நவம்பர் 2,3, 9 மற்றும் 10ம் தேதிகளில் விடுமுறை நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வதற்கான மனுக்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.இத்திட்டத்துக்கு அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பழனிசாமி தெரிவித்தார். இதில் வருவாய் அலுவலர் சுகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், கோட்டாட்சியர் செண்பகவள்ளி, தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்

Related Stories: