காங்கயம் பஸ்ஸ்டாண்டில் வாக்களர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

காங்கயம், செப். 11:காங்கயம் பஸ்ஸ்டாண்டில் பொதுமக்கள், பயணிகளுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார் வழங்கினார். தற்போது தேர்தல் கமிஷனால் வாக்களர் சாிபாா்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காங்கயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி பகுதிகளிலும் வாக்குச் சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சரிபார்க்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக பொதுமக்களிடம் விழப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார் தலைமையில் காங்கயம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் வாரச்சந்தை பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் காங்கயம் தாசில்தார் புனிதவதி, தேர்தல் துணை தாசில்தார், காங்கயம் ஆர்ஐ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: