13ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

திருப்பூர், செப்.11: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் வெள்ளிக்கிழமை 13ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.  இந்த முகாமில், எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ. டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். தங்களது பதிவில் குறையிருந்தால் சரிசெய்து கொள்வதுடன், கூடுதல் கல்வியையும் பதிவு செய்து கொள்ளலாம். தகுயிருந்தால் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறவும் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: