செல்போன் டவரில் பேட்டரி திருடியவர் கைது

அவிநாசி, செப்.11:அவிநாசி அருகே செல்போன் டவரில் இருந்த 8 பவர் பேட்டரிகளை திருடியவரை அவிநாசி போலீசார் நேற்று  கைது செய்தனர்.

அவிநாசி பழங்கரை பகுதியில் உள்ள செல்போன் டவரில் இருந்த 8 பேட்டரிகளை யாரோ ஒரு மர்ம நபர் வேனில் ஏற்றிக்கொண்டிருந்த போது செல்போன் டவரில் இருந்து அலாரம் சத்தம் கேட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த  செல்போன்டவர் நிறுவனத்தின் ஏரியா மேலாளர் விஜயகுமார்(50). பிரபு, வெங்கடேசன், சண்முகசுந்தரம் ஆகியோர் விரைந்துசென்று,   பேட்டரிகளை ஏற்றிய விழுப்புரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமாரை(29) என்பவரை பிடித்து, அவிநாசி போலீசில் ஒப்படைத்தனர். அவிநாசி போலீசார் வழக்கு பதிவுசெய்து ரூ. 48 ஆயிரம் மதிப்புள்ள பவர் பேட்டரிகளையும், வேனையும் பறிமுதல் செய்தனர். மேலும் சதீஷ்குமாரை கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: