கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில் தொழிலாளியிடம் பணம் பறித்த 2 பேர் கைது

கிருஷ்ணகிரி, செப்.11: கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில் கூலி தொழிலாளியிடம் ₹22 ஆயிரம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, கொட்டாரமதகு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்த மந்திரி மகன் தரணி(40). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மதியம், கிருஷ்ணகிரி பகுதியில் வேலை முடிந்து, தனது சொந்த ஊர் செல்ல கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 பேர், தரணி சட்டைப்பையில் வைத்திருந்த ₹22 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு ஓடினர். அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிடவே, அருகில் நின்றிருந்தவர்கள் அந்த 2 பேரையும் மடக்கி பிடித்தனர். இது குறித்த தகவலின் பேரில், பஸ் ஸ்டாண்டிற்கு வந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார், பிடிபட்ட 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணா(43), கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையைச் சேர்ந்த அப்துல்காதர் மகன் நசீர்(35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.


Tags : Krishnagiri ,bus stand worker ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே மழை வேண்டி ஊரை காலி செய்த மக்கள்