தாவரகரை கிராமத்தில் ஆமை வேகத்தில் ரேஷன் கடை கட்டுமான பணி

தேன்கனிக்கோட்டை, செப்.11: தேன்கனிக்கோட்டை அருகே தாவரகரை கிராமத்தில் 2 வருடங்களாகியும் முடியாத, பகுதிநேர ரேஷன் கடை கட்டிடத்தை விரைந்து கட்டி முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேன்கனிக்கோட்டை அருகே தாவரகரை கிராமத்தில், பகுதிநேர ரேஷன் கடை, வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கடைக்கு சொந்த கட்டிடம் கட்டி தரும்படி, கிராம மக்கள் எம்எல்ஏவிடம் மனு கொடுத்தனர். அதை தொடர்ந்து, பிரகாஷ் எம்எல்ஏ, தொகுதி மேம்பாட்டு நிதியில் ₹9.50 லட்சம் நிதி ஒதுக்கி, பகுதிநேர ரேஷன் கடை கட்ட நடவடிக்கை எடுத்தார். கடந்த 2 ஆண்டுகளாக கட்டிட பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்தது. பணிகளை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால் தரமில்லாத பொருட்களை கொண்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால், பகுதிநேர ரேஷன் கடை தொடர்ந்து வாடகை கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. எனவே, ரேஷன் கடை கட்டிடத்தை விரைந்து கட்டி முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : ration shop ,Tavernarai village ,
× RELATED புதிய ரேஷன் கடை திறப்பு