பூ மார்க்கெட் முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை, செப்.11: மதுரை மாட்டுத்தாவணியில் பூமார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். நாள்தோறும் 3ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த பூமார்க்கெட் முன்பாக ஒரு சில பெட்டிக்கடைகளுக்கு மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. அவற்றை மறித்து பூமார்க்கெட் வெளியில் டீக்கடை, வடை, கம்பங்கூழ், பூக்கடை என சிறிய வியாபாரிகள் கடைவிரித்துள்ளனர்.படிப்படியாக பந்தல் அமைத்து வியாபாரத்தை விரிவுபடுத்தினர். இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து மாநகராட்சிக்கு புகார் சென்றது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பந்தல், பேனர்களை அகற்றி லாரியில் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து இந்த இடம் கண்காணிக்கப்படும். ஆக்கிரமிப்புகள் மீண்டும் வந்தால் அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: