பாரதி விழாவில் பரிசு

மதுரை, செப்.11: மதுரையை அடுத்த கொண்டபெத்தான் நடுநிலை பள்ளியில் பாரதி விழா தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடந்தது. ஆசிரியர் பீட்டர் முன்னிலை வகித்தார். சுகிமாலா வரவேற்றார். பாரதி படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பாரதி வேடமிட்ட குழந்தைகள் பாரதி பாடல்களை பாடினர். பாரதி வரலாறு, கவிதை, பேச்சு, கும்மி, நாடகம், நடனம் ஆகியவை நடந்தது. பாரதி பற்றிய வினாடி வினா நடத்தப்பட்டது.பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பெற்றோர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை விஜயலட்சுமி தொகுத்து வழங்கினார்.Tags : Bharati Festival ,
× RELATED 9ம் தேதி முதல் பொங்கல் பரிசு