சிறுபான்மையின இளைஞர்களுக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி

மதுரை, செப். 11: தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் நிதியுதவிடன் படித்து வேலையில்லாத சிறுபான்மையின வகுப்பை சார்ந்த இளைஞர்களுக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள மத்திய காலணி பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட உள்ளது. இதில் ஸ்டிக்கர் கூட்ஸ் கார்மென்ட்ஸ் மற்றும் பிரி அசெம்பிளி ஆப்ரேட்டர் ஆகிய பயிற்சிகள் 46 நாட்கள் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பயிற்சிக்கும் 20 நபர்கள் வீதம் மொத்தம் 40 பேருக்கு பயிற்சி கொடுக்கப்படும்.இந்த பயிற்சிக்கு மதவழி சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள் பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமலும், 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒரு பயனாளி–்க்கு ரூ.1,534 பயிற்சி உதவித் தொகையாக வழங்கப்படும். உண்டு, உறைவிடம் இல்லை. இதற்கான நேர்காணல் வரும் 20ம் தேதி நடைபெறும்.இதில் சேர விரும்புவோர் அசல் சாதிச்சான்று, வருமானச்சான்று, ஆதார் அட்டை, கல்விச்சான்று ஆகியவற்றுடன் நேரில் வரவேண்டும். இதுதொடர்பாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மதுரை கலெக்டர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

Related Stories: