பக்தி பாடலை பாடி அசத்தும் எஸ்எஸ்ஐ

போச்சம்பள்ளி, செப்.11: போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க பக்தி பாடல்களை பாடி அசத்தும் எஸ்எஸ்ஐயின் வீடியோ தற்போது வாட்ஸ் ஆப்பில் வைரலாகி வருகிறது. போச்சம்பள்ளி  தாலுகா, பாரூர் போலீஸ் ஸ்டேசனில் எஸ்எஸ்.ஐயாக பணியாற்றி வருவபர்  வெங்கடாசலம்(46) இந்த ஸ்டேசனில் குறைந்தளவிலேயே போலீசார் உள்ளதால், கடுமையான பணிசுமை உள்ளது. கடந்த ஒரு வாரமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்  மாவட்டங்களை சேர்ந்த மக்கள், ஆயிரத்திற்கு மேற்பட்ட விநாயகர்  சிலைகளை மஞ்சமேடு தென்பெண்ணையாற்றில் கரைத்து வருகின்றனர். அதை  கண்காணிக்க பாரூர் போலீசார் 7 நாட்களாக இரவு, பகலாக பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டனர். இதனால் போலீசார் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.  மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக எஸ்எஸ்.ஐ வெங்கடாசலம் ஓய்வு நேரங்களில் பக்தி பாடல்களை  பாடி அசத்தி வருகிறார். இதை வீடியோவாக எடுத்த சக போலீசார் அதை வாட்ஸ் ஆப்பில்  வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : Asathi SSI ,
× RELATED அம்மு அபிராமி படத்துக்கு பழங்குடியினர் எழுதிய பாடல்