மாவட்ட வாலிபால் போட்டி

உசிலம்பட்டி, செப். 11: பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட எழுமலை அரசு பள்ளி மைதானத்தில், மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது. போட்டியில் மதுரை, உசிலம்பட்டி, செக்காணூரணி, எழுமலை, திருமங்கலம், பேரையூர், டி.கல்லுப்பட்டி, சேடபட்டி, பகுதிகளிலிருந்து பல்வேறு அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் வெற்றி பெற நாக் அவுட் முறை நிர்ணயம் செய்யப்பட்டது.இறுதி போட்டியில் வெற்றி பெற்ற மதுரை எம்.எம்.பவுன்டேசன் அணி முதல் பரிசும், எழுமலை சக்சஸ் பாய்ஸ் பி அணி இரண்டாம் பரிசும், எழுமலை சக்சஸ் பாய்ஸ் ஏ அணி மூன்றாம் பரிசும் பெற்றது.

Advertising
Advertising

Related Stories: