நான்கு வழிச்சாலையில் அதிகாரிகள் ஆய்வு

வாடிப்பட்டி, செப்.11: மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் அடிக்கடி விபத்து நடைபெறுவதால், மின்விளக்குகள் அமைக்க வேண்டுமென தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக காவல்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் விபத்து நடைபெறும் பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வாடிப்பட்டி அருகிலுள்ள விராலிப்பட்டி, ஆண்டிபட்டி பங்களா, தனிச்சியம் பிரிவு, அய்யங்கோட்டை, நகரி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகிறது. அதிகளவில் இரவு நேரங்களிலேயே நடைபெறும் இவ்விபத்துக்கள் அப்பகுதியில் போதிய மின் விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்துள்ளதாலேயே நடைபெறுகிறது. உடன் நான்கு வழிச்சாலை பகுதிகளில் போதிய மின் விளக்குகள் அமைக்க வேண்டுமென, தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக நேற்று சமயநல்லூர் டி.எஸ்.பி ஆனந்த ஆரோக்கியராஜ் தலைமையில் சமயநல்லூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மற்றும் டோல்கேட் நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் நகரி, தனிச்சியம் பிரிவு, ஆண்டிபட்டி பங்களா உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தேவையான பகுதிகளில் மின்விளக்குகள் அமைத்திடவும், கூடுதல் தடுப்பு காலரிகள் அமைத்திடவும் ஆய்வின் போது பரிசீலிக்கப்பட்டது.Tags :
× RELATED சென்னை நெற்குன்றத்தில் வருமான...