பெற்றோர் திட்டியதால் சிறுமி தற்கொலை

திருமங்கலம், செப்.11: திருமங்கலம் அருகே வீட்டில் பணம் எடுத்ததை பெற்றோர் கண்டித்ததால் 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருமங்கலம் அருகேயுள்ள முத்தையன்பட்டியை சேர்ந்த 12 வயது சிறுமி 7ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி பள்ளியில் தின்பண்டங்கள் வாங்கி சாப்பிட வீட்டிற்கு தெரியாமல் பணம் எடுத்து சென்றுள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.இதனால் மாணவி, வீட்டில் இருந்த எலிமருந்தை குடித்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிந்துபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Tags : parents ,
× RELATED 4 வயது பெண் குழந்தையை தாக்கி மது...