பர்கூரில் 31 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

கிருஷ்ணகிரி, செப்.11: பர்கூர் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 31 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, அதை பயன்படுத்தி கடைகளின் உரிமையாளர்களுக்கு ₹12 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். பர்கூர் பேரூராட்சியில் துணை கலெக்டர் (பயிற்சி) சுகந்தி தலைமையிலான அலுவலர்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து திடீர் சோதனை மேற்கொண்டனர். பர்கூர் மெயின் ரோடு, கிருஷ்ணகிரி மெயின் ரோடு, துணிக்கடைகள், உணவகங்கள், இறைச்சி கடைகள், தள்ளு வண்டிகள், இனிப்பகங்களில் தடை செய்யப்பட்ட 31 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, கடைகளின் உரிமையாளர்களுக்கு ₹12 ஆயிரம் அபராதம் விதித்தனர். அப்போது, துணை கலெக்டர் சுகந்தி விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி, ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றார்.
பேரூராட்சி செயல் அலுவலர் சாம்கிங்ஸ்டன், தலைமை எழுத்தர் வெங்கடாசலம், இளநிலை உதவியாளர் சாமுண்டீஸ்வரி, துப்புரவு மேற்பார்வையாளர் விஜயக்குமார், வருவாய் ஆய்வாளர் செந்தில்நாதன், விஏஓ சம்சூதின் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் ஒரு வரம் தான்... சாபம் அல்ல..