சிதிலமடைந்த நிழற்கூடத்தை சீரமைத்து தர கோரிக்கை

போச்சம்பள்ளி, செப்.11: போச்சம்பள்ளியிலிருந்து கொடமாண்டப்பட்டி செல்லும் சாலையில் உள்ள மாதம்பதி கூட்ரோடு பஸ் நிறுத்தத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்காக நிழற்கூடம் அமைக்கப்பட்டது. போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள் மாதம்பதி பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நிழற்கூடம் தற்போது சிதிலமடைந்துள்ளது. இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த நிழற்கூடத்தை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : gallery ,
× RELATED தடுப்புசுவர் கட்டி தர கோரி கிராம மக்கள் மனு