×

பந்தலூர் அருகே பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு

பந்தலூர், செப்.11 :  பந்தலூர் அருகே உப்பட்டி எம்.எஸ்.எஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி நிர்வாக குழு தலைவர் ஆலி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் கவிதா நிகழ்ச்சியை துவக்கி வைத்து சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்து பேசினார். தொடர்ந்து ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் ஜேம்ஸ் மற்றும் எஸ்தர் ஆகியோர் கலந்து கொண்டு சுகாதார சீர்கேட்டினால் ஏற்படும் விளைவுகள், பாதிப்புகள் குறித்து பேசினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்களும் மாணவர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் பள்ளியின் துணை முதல்வர் ருக்மணி  நன்றி கூறினார்.

Tags : school ,Bandalur ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி