×

கருப்பு பேட்ஜ் அணிந்து சுகாதார ஆய்வாளர்கள் போராட்டம்

ஊட்டி, செப்.11:  சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் சுகாதார ஆய்வாளர்களை ஆட்குறைப்பு செய்ய பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணையை எதிர்த்து நேற்று சுகாதார ஆய்வாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் சுகாதார ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இப்பணிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசானை 337 மற்றும் 338 வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து நேற்று தமிழ்நாடு முழுவதிலும் உள்ள சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நேற்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலனவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதார ஆய்வாளர்கள் சங்க நீலகிரி மாவட்ட தலைவர் மூர்த்தி சோலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Tags : Health inspectors ,
× RELATED தமிழ்நாட்டில் மருத்துவ சேவை 3 மடங்கு...