கொடைக்கானலில் காணொளி பயிற்சி

கொடைக்கானல், செப். 11:  கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் கணினி துறை சார்பில் மாணவிகளுக்கு காணொளி பகுப்பாய்வு வீடியோ அனலிட்டிக்ஸ் பயிற்சிகள் வழங்கப்பட்டன. பல்கலை பதிவாளர் ஹில்டா தேவீ தலைமை வகித்து துவங்கி வைத்தார். தேர்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் பாலமேரி டெபோரா, ஆராய்ச்சி துறை தலைவர் ரமணி முன்னிலை வகித்தனர். 2 நாள் பயிற்சி வகுப்பில் மோகன் ராஜ் மாணவிகளுக்கு வீடியோ அனாலிடிக்ஸ் முக்கியத்துவம் குறித்த பயிற்சி அளித்தார், ஏற்பாடுகளை துறை தலைவர் விமலா செய்திருந்தார். இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: