வீட்டை உடைத்து நகை திருட்டு பழநியில் துணிகரம்

பழநி, செப். 11: பழநி அருகே புதுநகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  பழநி புறநகர், புதுநகரை சேர்ந்தவர் முருகானந்தம் (62). சர்வேயராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு உறவினர் திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்று விட்டார். நேற்று வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்ததுடன், அதிலிருந்த 6 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரிந்தது. இதுகுறித்து உடனே முருகானந்தம் பழநி டவுன் போலீசிற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். குற்ற சம்பவங்களை தடுக்க பழநி நகர், புறநகர் பகுதிகளில் போலீசார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : House ,
× RELATED வீட்டில் புகுந்து 5 பவுன் நகை திருட்டு