விதி மீறிய வாகனங்களுக்கு ரூ.4.22 லட்சம் அபராதம்

கோவை, செப்.11: கோவை மண்டலத்தில் போக்குவரத்து துறை சார்பில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் விதி மீறிய வாகனங்களுக்கு ரூ.4.22 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. கோவை மண்டல போக்குவரத்து துறை சார்பில் மண்டல பகுதிகளில் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் கடந்த 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் மொத்தம் 985 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன.

Advertising
Advertising

மேலும் விதி மீறலில் ஈடுபட்ட 247வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டன. மேலும் வரி செலுத்தாமல் இயக்குதல், ஏர் ஹார்ன்கள் பொருத்துதல், அதிவேகத்தில் இயக்குதல், சாலை விதிகளை பின்பாற்றாமல் இயக்கிய வாகனங்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 22 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் ஆவணங்கள் இன்றி இயக்கிய பைக் 2, மேக்சி கேப் 1, டாக்சி 1, சரக்கு வாகனம் 5, என மொத்தம் 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: