இலவச லேப்டாப் வழங்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்ட மாணவிகள்

திருப்பூர், செப் 11:திருப்பூர் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவிகள் இலவச லேப்டாப் வழங்க கோரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.திருப்பூர் பெரியகடை வீதியில் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 2000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில் 2018-19 கல்வியாண்டி 12ம் வகுப்பு நிறைவு செய்ய மாணவிகளுக்கு அரசின் சார்பில் வழங்கபடும் இலவச லேப்டாப் வழங்கவில்லை என கூறி நேற்று 20க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். பின்னர் முற்றுகையிட்ட மாணவிகளிடம் பள்ளியின் ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இலவச லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: