அல்-அமீன் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

ஈரோடு, செப்.11: அல்-அமீன் பாலிடெக்னிக் கல்லூரியில் 3ம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அப்ரண்டிஸ் பயிற்சி உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு, ‘மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பித்தவுடன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை குறித்தும், மேலும் துறைவாரியாக பயிற்சியின் போது வழங்கப்படும் ஊதியம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

Advertising
Advertising

இந்த நிகழ்ச்சியில் அல்-அமீன் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் செயலாளர் மற்றும் தாளாளர் அல்ஹாஜ் ஜபருல்லாஹ், முதல்வர்கள், துணை முதல்வர்கள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை அலுவலர்கள், துறை தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் இபால் மன்சூர் பாஷா வரவேற்றார். கல்லூரி முதல்வர் கமால் பாட்ஷா சிறப்புரையாற்றினார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆசிரியர் முஸ்தாக் அகமது நன்றி கூறினார்.

Related Stories: