மாவட்டத்தில் இரண்டாம் பருவ பாட புத்தகம் 3ம் தேதி வழங்கப்படும்

ஈரோடு, செப். 11:   ஈரோடு மாவட்டத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இரண்டாம் பருவ பாட புத்தகம் அக்.,3ம் தேதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நாளை (12ம் தேதி) முதல் பருவ தேர்வு துவங்குகிறது.

Advertising
Advertising

இத்தேர்வு 23ம் தேதி வரை நடக்கிறது. பின்னர் விடுமுறை முடிந்து அக்.,3ம் தேதி இரண்டாம் பருவம் துவங்க உள்ளது. இதில் மாவட்டத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 75 ஆயிரம் மாணவ-மாணவிகளும், 6,7,8ம் வகுப்புகளில் 51ஆயிரம் மாணவ-மாணவிகளும் படிக்கின்றனர். இவர்களுக்கு இரண்டாம் பருவ பாட புத்தகம் தேவை குறித்து அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு வரும் முதல் நாளில் பாட புத்தகம், நோட்டுகள் வழங்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: