சிறந்த சாரண, சாரணியர் ஆணையர்களுக்கு பாராட்டு விழா

ஜெயங்கொண்டம், செப். 11: சென்னையில் கடந்த 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை மாநில அளவிலான 10வது தமிழக மாநில சாரண சாரணியர்களின் பெருந்திரல் அணி கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றது. பல்வேறு போட்டிகளில் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தை சேர்ந்த சாரண சாரணியர்கள் வெற்றி பெற்றனர். மேலும் சிறப்பாக பணியாற்றிய ஆணையர்களுக்கு பாராட்டு விழா ஜெயங்கொண்டத்தில் பாத்திமா மெட்ரிக் பள்ளியில் நடந்தது. உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் மணிவண்ணன் தலைமை வகித்தார் பள்ளி தாளாளர் ரோச் அலெக்சாண்டர், முதல்வர் உர்சலா சமந்தா, மாவட்ட பயிற்சி ஆணையர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தனர். மாநில அளவில் நடந்த கூட்டத்தில் போட்டிகளில் வெற்றி பெற்ற சாரண சாரணியர்களுக்கும் நீண்ட நாட்களாக சிறப்பாக பணியாற்றி சேவை செய்த மாநில விருது பெற்ற மாவட்ட பயிற்சி ஆணையர் சுவாமிநாதனுக்கு சான்றிதழ், பதக்கங்களை மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் வழங்கினார். முன்னதாக மாவட்ட சாரண செயலாளர் பாண்டியன் வரவேற்றார். மாவட்ட அமைப்பு செயலாளர் முரளிதரன் நன்றி கூறினார்


Tags : Commendation Ceremony ,Scout Commissioners ,
× RELATED எந்த மொழியையும் கற்றுக்கொள்வது...