உயர்நீதிமன்ற நீதிபதி பணிமாற்றம் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

பெரம்பலூர்,செப்.11:உயர் நீதிமன்ற நீதிபதி பணிமாற் றத்தைக் கண்டித்து பெரம் பலூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகாலயா யூனியன் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பணியிட மாற்றம் செய்த தைக் கண்டித்தும், நீதிபதி யின் பதவிவிலகல் கடிதத் தை திரும்பப்பெற வலியு றுத்தியும் தமிழக அளவில் நேற்று வழக்கறிஞர் சங்கங்கள் நீீதிமன்றப்புறக்கணி ப்புப் போராட்டங்களில் ஈடு பட்டிருந்தனர்.பெரம்பலூரில்வழக்கறிஞர் வள்ளுவன்நம்பி தலைமை யிலான பெரம்பலூர் வழக் கறிஞர்கள் சங்கம், வழக் கறிஞர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அட்வ கேட் அசோசியேசன் சங் கம் ஆகியவற்றைச் சேர்ந்த 200க்கும்மேற்பட்ட வழக்கறி ஞர்கள் நேற்று (10ம்தேதி) பெரம்பலூர் மாவட்ட ஒருங் கிணைந்த நீதிமன்ற வளா கத்திலுள்ள நீதிமன்றங்க ளில் நீதிமன்ற புறக்கணிப் புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிம ன்றங்களின் அன்றாடப்ப ணிகள் பெருமளவு பாதிக் கப்பட்டன.

Tags : Protests ,lawyers ,judge strike ,Supreme Court ,
× RELATED கும்பகோணம் அருகே விவசாயிகள்...