மின் இணைப்புகளின் வைப்புத்தொகை உயர்த்துவதை கண்டித்து விவசாயிகள், மின் நுகர்வோர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், செப். 11: மின் இணைப்பு வைப்புத்தொகையை உயர்த்துவதற்கும், மின் கட்டணத்தை உயர்த்துவதற்கும் ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழ்நாடு மின்சார வாரியம் செய்த பரிந்துரையை வாபஸ்பெற வலியுறுத்தி பெரம்பலூர் மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் மின்நுகர்வோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழ்நாடு மின்சார வாரியம், ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் இணைப்பு வைப்புத்தொகையை உயர்த்துவதற்கும், மின் கட்டணத்தை உயர்த்துவதற்கும் பரிந்துரை செய்துள்ளது. இதை கண்டிப்பதுடன் தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடியாக தனது மின்கட்டண உயர்வு மற்றும் மின் இணைப்பு வைப்புத்தொகை உயர்வுக்கான பரிந்துரையை வாபஸ் பெற வலியுறுத்தி,பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் மின்நுகர்வோர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் வரதராஜன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் மற்றும் பெரம்பலூர், அரும்பாவூர், காடூர், வேப்பந்தட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர் பங்கேற்றனர். பின்னர் தமிழ்நாடு மின்சார வாரிய பெரம்பலூர் வட்ட மேற்பார்வை பொறியாளர் கருப்பையாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags : Power Consumers ,
× RELATED உள்ளாட்சி தேர்தலில் பணப்புழக்கம்...