×

கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படகூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையம் அரியலூர் கலெக்டர் தகவல்

அரியலூர்,செப்.11: அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில், மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகத்தின் சார்பில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள்குறித்துஅனைத்துதுறைஅலுவலர்களுடன்நேற்று ஆலோசனைக் கூட்டம்கலெக்டர் வினய்தலைமையில்நடைபெற்றது.இதில் கலெக்டர் பேசுகையில், அரியலூர்மாவட்டத்தில்வடகிழக்குபருமழையின்போது, நீர்நிலைகளால் பாதிக்கப்படும்பகுதிகளாக 29 பதற்றமானபகுதிகள்; கண்டறியப் பட்டுள்ளது. இப்பகுதிகளைகண்காணித்திடவும், மாவட்ட அளவிலான அனைத்து கிராமப்பகுதிகளையும் ஆய்வு செய்திடவும் சப்.கலெக்டர் தலைமையில் பல்துறை அலுவலர்களைக் கொண்டு மண்டலகண்காணிப்புக்குழு 5 குழுக்களாக அமைக்கப் பட்டுள்ளது.பேரிடர் பாதிப்புக்குள்ளாகும்பகுதிகளில் நிவாரண மையம்அமைத்து, அம்மையத்தில் கவைக்கும்பொதுமக்களுக்குஅனைத்துவசதிகளும்தயார்நிலையில்வைத்திருக்கவேண்டும்.பேரிடர்காலங்களில்பாதிக்கப்படும்நபர்களுக்குஉடனடியாகநிவாரணஉதவிகள்வழங்கிடஅனைத்துத்துறைஅலுவலர்களுக்குஉத்தரவிடப்பட்டு, பொதுவிநியோகத்திட்டத்தில் உள்ளஉணவுப்பொருட்கள்இப்பருவமழைகாலங்களில் 3 மாதங்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும். மேலும், மழை காலங்களில் நோய்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து போதுமான மருந்துகள் தயார் நிலையில் இருப்பு வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, பாம்பு மற்றும் விஷக்கடி மருந்துகள் தயார்நிலையில்அரசுமருத்துவமனைகளில்இருந்திடவேண்டும்.மேலும், மீட்புஉபகரணங்களானஜே.சி.பி, ஜெனரேட்டர், மரம்அறுக்கும்கருவி, டார்ச்லைட், போன்றஉபகரணங்கள்திட்டமிட்டுமுன்கூட்டியேதயார்நிலையில்வைத்திருக்கவேண்டும். ம்மாவட்டத்திலுள்ளநீர்நிலைகள்ஆக்கிரமிப்புகள்அகற்றப்பட்டுஏரிமற்றும்மதகுகள், குளம்மற்றும்வாய்க்கால்தூர்வாரப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கழிவுநீர்வாய்க்கால்கள்அடைப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளவும், மழைநீர்வடிகால்வசதியும் ஏற்படுத்திட உரியஅலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரகவளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டில்உள்ளசாலைகள்மற்றும்சிறுபாலங்கள், பாலங்கள் தொடர்கண்காணிப்பில் இருந்திடவேண்டும்.பேரிடர்மீட்புபணிக்காகவரும்தேசியபேரிடர்மீட்புக்குழு, தமிழ்நாடுபேரிடர்மீட்புக்குழுமற்றும்மத்தியக்குழுஆகியகுழுக்களுக்குதேவையான வசதிகளைசெய்திடவேண்டும்.

ருவமழைகாலங்களில்கால்நடைகளுக்குதேவையானமருந்துகள்கால்நடைமருந்துகங்களில்தயார்நிலையில்வைத்திடவேண்டும்மற்றும்நோய்தடுப்புமுன்னெச்சரிக்கைநடவடிக்கைகள்எடுக்கப்படவேண்டும். குறிப்பாக,தமிழ்நாடு மின்சாரவாரியம் இம்மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடனடியாக ஆய்வுமேற்கொண்டு தாழ்வான பகுதிகளில் செல்லும்மின்ஒயர்களைமாற்றியும், பழுதடைந்துள்ளமின்கம்பங்கள், மின்மாற்றிகளை கண்டறிந்து உடனடியாக சரிசெய்திடவேண்டும்எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கிழக்குபருவமழையின்போதுபேரிடர்தொடர்பாகபொதுமக்கள்தொடர்பு கொள்ள கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர்கால கட்டுப்பாட்டுமையம்அமைக்கப்பட்டுள்ளது. மையத்தினைதொடர்புகொள்ளகட்டணமில்லாதொலைபேசிஎண்.1077 மற்றும் 04329 228709 என்றதொலைபேசிஎண்ணிற்கு தகவல்தெரிவித்திடவேண்டும் என்றார். முன்னதாக,மாவட்டதீயணைப்புத்துறையின்சார்பில்வடகிழக்குபருவமழையின்போது முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள்குறித்துசெயல்விளக்கம் கலெக்டர் அலுவலகவளாகத்தில் கலெக்டர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் முன்னிலையில்காண்பிக்கப்பட்டது. இதில், மாவட்டவருவாய்அலுவலர்பொற்கொடி, திட்டஇயக்குநர்சுந்தர்ராஜன், கலெக்டரின் நேர்முகஉதவியாளர்முருகன், தாசில்தார் விக்டோரியாமற்றும்அனைத்துத்துறைஅலுவலர்களும் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED நாட்டார்மங்கலத்தில் மாரியம்மன் வீதி உலா