×

230 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

பெரம்பலூர்,செப்.11: பெரம் பலூரில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 111-வது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த சைக்கிள்போட்டி.230 மாணவ, மாணவியர் பங் கேற்றனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்டப் பிரி வின் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் 111வது பிறந்த நாளை யொட்டி, சைக்கிள் போட்டி கள் நேற்று காலை 7மணி க்கு நடந்தது. பெரம்பலூர் கலெக்டர்அலுவலகப் பெரு ந்திட்ட வளாகம் முன்புள்ள ரவுண்டானாவிலிருந்து பாலக்கரை சென்று மீண் டும் ரவுண்டானா வந்தடை வதற்கான வழித்தடத்தில் சைக்கிள்போட்டி நடைபெற் றது.போட்டிகளை டிஆர்ஓ ராஜேந்தி ரன் கொடியசைத்து தொட ங்கி வைத்தார். இதில் 13 வயதிற்குட்பட்ட, 15வயதிற் குட்பட்ட,17 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கு என 3 பிரிவுகளில் ஆண் கள், பெண்களுக்குத் தனித் தனியாக போட்டிகள் நடத்த ப்பட்டன.

இந்த போட்டிகளி ல் பெரம்பலூர் மாவட்டத் தைச் சேர்ந்த 120மாணவ ர்கள், 110மாணவிகள் என 230 பேர் தங்களது சொந்த சைக்கிள்களுடன் போட்டி யில் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றிபெ ற்ற வீரர், வீராங்கனைக ளில் ஒவ்வொரு பிரிவி லும் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்குப் பரிசு கள், சான்றிதழ்கள் வழங்க ப்பட்டன. பரிசுகளை டிஆர்ஓ ராஜேந்திரன் வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில் பெரம்பலூர் தாசில்தார் பாரதிவளவன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, மாவட்ட பெண்கள் விளையாட்டு விடுதி மேலாளர் ஜெயக்குமாரி, மாவட்ட தடகள பயிற்றுனர் கோகி லா, மாவட்ட டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன், மாவட்ட ஹேண்ட்பால் பயி ற்சியாளர் வாசுதேவன் மற் றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண் டனர்.


Tags : Student ,
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...