சாலை விரிவுப்படுத்தும் பணி 100 ஆண்டு பழமையான 150 புளிய மரங்கள் வெட்டி சாய்ப்பு

பெரம்பலூர்,செப்.11: பெரம் பலூர்-துறையூர் சாலையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தின்கீழ் சாலை விரிவுபடுத்தும் பணிகளுக்காக 100 ஆண் டுகள் பழமைவாய்ந்த 150 புளியமரங்கள் வேரோடு வெட்டி சாய்க்கப்பட்டது.பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சி-சென்னை வழித் தடங்களில் தேசிய நெடுஞ் சாலை உள்ளது. இதேபோ ல் பெரம்பலூர்- அரியலூர் சாலை மற்றும் பெரம்பலூர் -ஆத்தூர்சாலை ஆகிய இர ண்டு சாலைகளும் தேசிய நெடுஞ்சாலைகளாகத் தரம் உயர்த்தப் பட்டுவிட்டன.இருந்தும் அரசு விரைவு போக்கு வரத்து கழக பஸ் கள் பயணிக்கக் கூடிய, பெரம்பலூர்- துறையூர் சாலை இன்னும் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப் படாமலேயே உள்ளது. 35 கிமீ நீளமுள்ள இந்த பெரம்பலூர் துறை யூர் சாலையில் இரு பகுதி களாக சாலைகள் விரிவு படுத்தப்பட்டு நான்குவழிச் சாலை அமைக்கும் திட்டப் பணிகள் தற்போது மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.இதில் ஏற்கனவே பெரம்ப லூர்- துறையூர் சாலையில் செஞ்சேரி புறவழிச் சாலை யில் இருந்து, துறையூர் புற வழிச்சாலை வரையிலான 30 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை விரிவாக்கப்பணி கள், குரும்பலூர், நக்கசே லம் புறவ ழிச்சாலைகளு டன் அமைக்கத் திட்டமிடப் பட்டு ஆமை வேகத்தில் நட ந்து வருகிறது.இதேபோல் பெரம்பலூர் அரசு மேல்நி லைப்பள்ளி முதல், செஞ் சேரி கடகால் வாய்க்கால் பாலம் வரையிலான, ரூ8.70 கோடி மதிப்பிலான நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டப்பணிகள்,கடந்த நான் கு மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு, சாலையி ன் தென்புறம் அகலப்படுத் துவதற்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களில், கிராவல் மற்றும் ஜல்லிகள் நிரப்பப் பட்டு, அப்படியே கிடப்பில் போடப்பட் டிருந்தன.

இந்நிலையில் சாலை விரி வாக்கப் பணிகளுக்காக அரசு மேல்நிலைப்பள்ளி முதல் செஞ்சேரி பாலம் வரையிலான 3.4 கிமீ. நீளமுள்ள பகுதியில், சாலையின் இரு புறங்களி லும் உள்ள நூற்றாண்டுப் பழமை வாய்ந்த புளிய மர ங்கள் வேரோடு அகற்றப்ப டும் பணிகளுக்காக நெடு ஞ்சாலைத் துறையினர், சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினரிடம் அனுமதி கோரி காத்துக்கிடந்தனர்.நான்கு மாதங்களுக்குப் பிறகு தற்போது அனுமதி கிடைத்த நிலையில் இந்த 3.4கிலோ மீட்டர் தூரத்திற் குள் சாலையின் இருபுறங் களிலும் உள்ள 150 புளிய மரங்கள் அகற்றும் பணி கள் தற்போது நடந்து வருகிறது.இந்த புளிய மரங்கள் அகற் றும் பணிகளுக்கு முன்பா கவே, மாவட்ட வனத்துறை உதவியுடன், இப்பகுதியில் அகற்றப்படும் புளிய மரங்க ளுக்கு ஈடாக அதே சாலை யோரங்களில் சற்று அரு கே புதிய மரக்கன்றுகள் நட்டு வைத்து, பாதுகாப்பு வேலிகளுடன் அதனை தண்ணீர் ஊற்றி பராமரிக் கும் பணிகள் ஏற்கனவே நடந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி
முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை யொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பெரம்பலூர் மாவட்டஅளவிலான பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற மாணவிகள். அடுத்தபடம்:போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டி.ஆர்.ஓ ராஜேந்திரன் பரிசு வழங்கினார் அருகில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு.

Tags : Road ,
× RELATED சாலை விபத்துகளினால் ஏற்படும்...