பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதல் ஒருவர் பலி

பெரம்பலூர்,செப்.11: பெரம் பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ் சாலையில் நேற்று அதி காலை நடந்த விபத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவர் பலியானார்.கடலூர் மாவட்டம், பெண் ணாடம் பகுதியில் இருந்து விருதுநகர் நோக்கி ஜிப்சம் ஏற்றிய லாரி ஒன்று நேற்று அதிகாலை திருச்சி சென் னை தேசியநெடுஞ்சாலை யில், பெரம்பலூர் -சிறுவாச் சூர் இடையே சென்றுகொ ண்டிருந்தது. லாரியை துறையூரைச் சேர்ந்த ஆறு முகம் மகன் அசோக்குமார் (39) என்பவர் ஓட்டிச் சென் றார். அப்போது சென்னை யிலிருந்து கன்னியாகுமரி நோக்கி அதிவேகமாகச் சென்ற கார், லாரியின் பின் னால் மோதியது, இதில்காரில் பயணம்செய்த கன் னியாகுமரிமாவட்டம்,கொடி முனையை அடுத்த கல்கு ளம் அருகே உள்ள அன்பி யம் பகுதியை சேர்ந்த அந் தோனிப்பிள்ளை மகன் மெல்பின் (35) என்பவர் படு காயம் அடைந்து சம்பவஇட த்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து லாரிடிரைவர் அசோக்குமா ரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : car collision ,Perambalur ,
× RELATED திருப்போரூர் அருகே பைக் மீது கார் மோதி வாலிபர் சாவு