பாவூர்சத்திரம் சித்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா

பாவூர்சத்திரம், செப். 11: பாவூர்சத்திரம்  சித்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர்.பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகேயுள்ள சித்தி விநாயகர் கோயிலில் 7ம் ஆண்டு வருஷாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சுதர்ஸன ஹோமம்,  கும்ப ஜெபம் நடந்தது. தொடர்ந்து விநாயகர் விமானத்திற்கு கும்பாபிஷேகமும்,  சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மகேஷ்வர பூஜைக்கு பிறகு அன்னதானம் நடந்ததுய விழாவில் பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி. வேலாயுத நாடார் லெட்சுமி தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளர் காளியப்பன், இயக்குநர்கள்  ராஜேஷ் சங்கர குமார்,  லட்சுமி ஆனந்த், மற்றும்  விஜுந்தா ராஜேஷ்,   ராஜலட்சுமி ஆனந்த் மற்றும் பக்தர்கள் என திரளானோர் பங்கேற்று தரிசித்தனர்.

Advertising
Advertising

Related Stories: