தலைவன்கோட்டையில் வெட்டி கொலைசெய்யப்பட்ட அதிமுக நிர்வாகி குடும்பத்துக்கு அமைச்சர் ராஜலட்சுமி ஆறுதல்

நெல்லை, செப். 11: தலைவன்கோட்டையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி திருநீலபாண்டியனை  இழந்துவாடும் குடும்பத்தினரை அமைச்சர் ராஜலட்சுமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தலைவன்கோட்டையில் செயல்படும் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் தலைவரான  விஜயபாண்டியனுக்கும், துணைத்தலைவரான அதிமுக பிரமுகர் திருநீலபாண்டியனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 31ம்தேதி தலைவன்கோட்டையில் திருநீல பாண்டியனை விஜயபாண்டியன் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் மதுரை மாவட்டம் பேரையூர் நீதிமன்றத்தில் விஜயபாண்டியன் சரண் அடைந்தார். இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertising
Advertising

இதனிடையே கொலையான அதிமுக நிர்வாகி திருநீலப்பாண்டியன் இல்லத்துக்கு சென்ற  அமைச்சர் ராஜலட்சுமி, திருநீலப்பாண்டியை இழந்து வாடும் மனைவி ஜோதிலட்சுமி (33) மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதனிடையே நர்சிங் படித்துள்ள ஜோதிலட்சுமிக்கு அரசு வேலை வழங்குமாறு  குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ராஜலட்சுமி கூறினார்.

அமைச்சருடன் வாசுதேவநல்லூர் எம்எல்ஏ மனோகரன், அதிமுக நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா, ஒன்றியச் செயலாளர் மூர்த்தி பாண்டியன், முன்னாள் மாவட்ட பால் கூட்டுறவு தலைவர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் சென்றனர்.

Related Stories: