களக்காடு வரதராஜ பெருமாள் கோயில் வருஷாபிஷேகம் கோலாகலம்

களக்காடு, செப். 11: களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில்  வருஷாபிஷேக விழா  கோலாகலமாக நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

 களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் 11ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலத்துடன் நேற்று நடந்தது. இதையொட்டி வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி மற்றும் தேவியர்களுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி வருஷாபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி, தேவியர்கள், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து வரதராஜபெருமாள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளியதும் வீதியுலா நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர்.
Advertising
Advertising

Related Stories: