நெல்லை அருகே தொழிலாளியை மிரட்டியவர் கைது

நெல்லை, செப். 11:  நெல்லை அருகே தொழிலாளியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்யப்பட்டார். மானூர் அருகேயுள்ள மேல இலந்தைகுளத்தை சேர்ந்தவர் பெரியசாமி (40). இவர் சம்பவத்தன்று அழகியபாண்டிபுரம் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பல்லிக்கோட்டையை சேர்ந்த கணேசன் மகன் மாடசாமி (24) என்பவர் செலவிற்கு பணம் தருமாறு பெரியசாமியிடம் கேட்டார். ஆனால், பணம் தர மறுத்ததால் அவருக்கு மாடசாமி மிரட்டல் விடுத்து சென்றாராம். இதுகுறித்து பெரியசாமி மானூர் போலீசில் புகார் கொடுத்தார்.

இதேபோல் தச்சநல்லூர் கரையிருப்பைச் சேர்ந்த அப்பாகுட்டி (50) தனது மகன் பப்பியை (22) மாடசாமியுடன் பழகக் கூடாது என கண்டித்தார். இந்நிலையில் அப்பாகுட்டி தாழையூத்து பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாடசாமி அவரிடம் தகராறு செய்து மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து வழக்குப் பதிந்த தாழையூத்து போலீசார் மாடசாமியை கைது செய்தனர்.

Tags : paddy field ,
× RELATED தொழிலாளி மீது தாக்குதல்