வடகரையில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம்

செங்கோட்டை, செப். 11: செங்கோட்டை அருகே  வடகரையில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. செங்கோட்டை  அடுத்த வடகரையில் வேளாண் வணிகத் துறை சார்பில் சிறப்பு பகுதி மேம்பாட்டு  திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் நிறுவன விவசாயிகள் விழிப்புணர்வு முகாம் மற்றும் பயிற்சி வகுப்பு நடந்தது. இதை நெல்லை மாவட்ட வேளாண் வணிகத்  துறை இயக்குநர் முருகானந்தம் துவக்கிவைத்து கூட்டு பண்ணையம் குறித்து  விளக்கினார்.

Advertising
Advertising

உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்தல், நிர்வாகவியல்  குறித்து ஆலங்குளம் வேளாண் அலுவலர் முத்துக்குமார் பேசினர். மதிப்பு  கூட்டல் தொழில்நுட்பம் குறித்து உணவு கலை வல்லுநர் சுப்புலட்சுமி  செயல்முறை  விளக்கம் அளித்தார். தென்காசி கோட்ட வேளாண் அலுவலர் முகைதீன்  பிச்சை, சந்தை நிலவரம் துறை சார்ந்த திட்டங்களை எடுத்துரைத்தார். பொதிகை  சாரல் செயல் அலுவலர் வினோத், உழவர் உற்பத்தியாளர் திறன் செயல்பாடு  குறித்துப் பேசினார். இம்முகாமில் நதிகள் இணைப்பு சங்கச் செயலாளர் ஜாகிர்  உசேன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர்கள் கருப்பையா, கிருஷ்ணன் செய்திருந்தனர்.

Related Stories: