பண்பொழி அங்கன்வாடி மையத்திற்கு சீர்வரிசை பொருட்கள்

செங்கோட்டை, செப். 11: செங்கோட்டை அருகே பண்பொழி  அங்கன்வாடி மையத்திற்கு பொதுமக்கள் சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
இதையொட்டி அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்குத் தேவையான விளையாட்டுப் பொருட்கள், நாற்காலிகள், கல்வி சாதனங்கள், பாய்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை சீர்வரிசையாக பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்துசென்று அங்கன்வாடி மையத்தில் வழங்கினர்.

விழாவுக்கு அங்கன்வாடி கமிட்டி தலைவர் வெள்ளபாண்டி கணேசன் தலைமை  வகித்தார். முருகேஸ்வரி, புதிய வீரமுத்து, சின்னதம்பி, குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் தானியா சிறப்புரையாற்றினார். மனித உரிமை மற்றும் காப்பு களம் இயக்குநர் பரதன், குழந்தைகளுக்கான சீர்வரிசை பொருட்களை வழங்கினார். விழாவில் அருந்ததி பெண்கள் எழுச்சி  இயக்கத்தினர், ஊர் மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மனித உரிமை மற்றும் காப்பு களம் பணியாளர்கள் தங்கம், பரமேஸ்வரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags : culture Anganwadi center ,
× RELATED நெல்லை- குமரி நான்கு வழிச்சாலை...