தெற்கு காந்தி கிராமம் அண்ணா நகர் 3வது தெருவில் ஜல்லிகள் கொட்டியதோடு பாதியில் நிறுத்தப்பட்ட தார்ச்சாலை பணி

கரூர், செப். 11: கரூர் நகராட்சிக்குட்பட்ட தெற்கு காந்திகிராமம் அண்ணா நகர் 3வது தெரு சாலையை விரைந்து தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.கரூர் நகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம், தாந்தோணிமலை, ராயனூர் போன்ற பகுதிகளில் சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தெற்கு காந்திகிராமம் அண்ணா நகர் 3வது குறுக்குத்தெருவில் தார்ச்சாலை அமைக்கும் வகையில் முதற்கட்ட பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு அப்படியே விடப்பட்டுள்ளன.இதனால் இந்த சாலையை பயன்படுத்திட முடியாமல் இந்த பகுதியினர் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஜல்லிக் கற்கள் கொட்டிய நிலையில் உள்ள இந்த சாலையை மேம்படுத்தும் வகையில் தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு உடனடியாக தார்ச்சாலையாக மாற்ற தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.Tags : South Gandhi Village ,Anna Nagar ,3rd Street ,
× RELATED அண்ணாநகர் அஞ்சலக அலுவலகம் இடமாற்றம்