×

கரூர் ராயனூர், மில்கேட் பகுதியில் ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கும் வடிகால்கள்


கரூர்,செப்.11: கரூர் ராயனூர் மற்றும் மில்கேட் பகுதிகளில் திறந்த நிலையில் மெகா சாக்கடை வடிகால்கள் உள்ளது. இதனை சிலாப் மூலம் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கருர் நகராட்சிக்குட்பட்ட ராயனூரில் இருந்து தில்லை நகர் செல்லும் பிரதான சாலையோரம் பிரதான சாக்கடை வடிகால் செல்கிறது. இந்த சாக்கடை வடிகால் குறிப்பிட்ட தூரம் வரை திறந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையின் வழியாக செல்லும் அனைத்து தரப்பினர்களும் பீதியில் உள்ளனர். இதே போல் தாந்தோணிமலை வஉசி தெருவில் பஸ்பாடி நிறுவனம், தனியார் மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியிலும் ஆபத்தான நிலையில் சாக்கடை வடிகால் திறந்த நிலையில் தான் உள்ளது.அடிக்கடி இந்த பகுதியில் வாகன விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. இரண்டு பகுதிகளிலும் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இந்த பகுதியில் உள்ள சாக்கடை வடிகால்களை சிலாப் கொண்டு மூடிட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு சிலாப் வைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.Tags : Karur Rayonur ,Milkgate ,
× RELATED முக்கொம்பு காவிரி ஆற்றில் இருந்து...