×

இணையதள விளையாட்டுக்களால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கம்

கரூர், செப். 11: இணைய விளையாட்டுக்களால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.இணைய விளையாட்டுக்களால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த சர்வதேச கருத்தரங்கம் பரணி வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. தாளாளர் மோகன ரெங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். பாதுகாப்பு அமைச்சரக முன்ளாள் தேசியக்குழு உறுப்பினரும் பரணிபார்க் கல்விக்குழும முதன்மை முதல்வருமான முனைவர் ராமசுப்பிரமணியன் இணைய விளையாட்டுக்களால் மாணவர்களுக்கு ஏற்படும் மனரீதியான மற்றும் நடத்தை ரீதியிலான பாதிப்புகள் என்ற தலைப்பில் பேசினார். சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த கருத்தாளர்கள் மதியழகன், மூர்த்தி, அருமைச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. டிக்டாக் நாடகம் சிறந்த விழிப்புணர்வு கலைநிகழ்வாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. சுதாதேவி வரவேற்றார். பிரியா நன்றி கூறினார்.Tags :
× RELATED எட்டாக்கனியான ஆன்லைன் வகுப்புகள்:...