சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு எதிர்ப்பு கரூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோர்ட் புறக்கணிப்பு ேபாராட்டம்

கரூர், செப். 11: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் வக்கீல்கள் சங்கம் சார்பில் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தாஹில் ரமானியை மேகாலயா தலைமை நீதிபதியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டது. இதனை கண்டித்தும் நீதிபதியின் பதவி விலகலை திரும்ப பெற வலியுறுத்தியும் கரூர் வக்கீல்கள் சங்க தலைவர் மாரப்பன் தலைமையில் 400க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பு செய்து போராட்டம் நடத்தினர். இதே கோரிக்கைளை வலியுறுத்தி குளித்தலை வக்கீல்கள் சங்கத்தினர் சார்பிலும் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.


Tags : Protests ,lawyers ,protest ,transfer ,Karur ,Chennai IGC ,
× RELATED வக்கீல்கள் போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் ஆதரவு