வர்தாபுயலில் மரம் விழுந்து சேதமான அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைப்பதில் அலட்சியம்

ஊத்துக்கோட்டை, செப். 11: பெரியபாளையம் அருகே மாம்பள்ளம் கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டிதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம், மாம்பள்ளம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு,  70க்கும் மேற்பட்டமாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் ஓடு போட்ட வகுப்பறை, தளம் போட்ட கட்டிடம் என 4 வகுப்பறைகள் உள்ளன. இதில், ஓடு போட்ட கட்டிடம் மிகவும் பழுதடைந்து சேதமடைந்துள்ளதால் அதை யாரும் பயன்படுத்துவது கிடையாது.

மேலும், தளம் போட்ட கட்டிடத்திலும், அதன் அருகிலும் உள்ள காம்பவுண்டு சுவர் மீது கடந்த 2015ம் ஆண்டு வர்தா புயலின்போது மரம் விழுந்து சேதம் அடைந்தது. இதில், காம்பவுண்டு சுவர் உடைந்து விட்டது. இதனால், மாணவர்கள் போதிய பாதுகாப்பில்லாமல் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். எனவே, காம்பவுண்டு சுவரை கட்ட வேண்டும்.  சேதமடைந்து பயன்படுத்தப்படாமல் உள்ள ஓடு போட்ட கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். மேலும், தளம் போட்ட கட்டிடத்தில் ஏற்பட்ட சேதத்தையும் சீரமைக்க வேண்டும் என  பெற்றோர்கள் வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘வர்தா புயலின்போது  மரம் விழுந்து மாம்பள்ளம் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் சேதமடைந்தது. அதை சரி செய்யாமல்,  உடைந்து போன சுவற்றின் மீது வர்ணம் பூசியுள்ளார்கள். தற்போது, அந்த சுவற்றில் இருந்து செங்கற்கள் பெயர்ந்து விழுகின்றன. இதனால், மாணவர்கள் அச்சமடைகிறார்கள்.  எனவே, புதிய பள்ளி கட்டிடம் கட்டுவது மட்டுமல்லாமல்,  காம்பவுண்டு சுவற்றையும்  கட்ட வேண்டும்’ என்றனர்.

Tags : government school building ,
× RELATED அதிகாரிகளின் அலட்சியத்தால் தடை...