×

குடிமராமத்து பணியில் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, செப்.11: கோவில்பட்டியில் கிராமப்புறங்களில் நடைபெறும் குடிமராமத்து பணிகளில் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி பகத்சிங் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராமப்புறங்களில் குடிமராமத்து பணிகள் எனும் பெயரில் கண்மாய் சரள் மண்ணை சட்டத்திற்கு விரோதமாக எடுப்பதை தடுத்து நிறுத்தவும், குடிமராமரத்து பணிகளில் கிராம மக்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்கவும், சட்டப்படி கிராம மக்கள் குழு அமைத்து குடிமராமத்து பணிகளை செயல்படுத்த வேண்டும் என்றும், குடிமராமத்து பணியின் தகவல் பலகை வைக்கவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் பகத்சிங் மன்றம் மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவில்பட்டி இஐஎஸ் மருத்துவமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் சின்னச்சாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ரத்தினவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் உத்தண்டராமன் பேசினார். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சீத்தாராமன், நரிக்குறவர் சங்க மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, பெண்கள் பாதுகாப்புகுழு தாலுகா தலைவர் சுந்தரி, கயத்தாறு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, ஒன்றிய தலைவர் சங்கரலிங்கம், ஆட்டோ தொழிற்சங்க தாலுகா செயலாளர் கொம்பையா, கணபதி, சுப்புராஜ், ரமேஷ்கண்ணா, லட்சுமணன், பொன்ராஜ், பேச்சியம்மாள், கணேசன், பூமிபாலன், சடையாண்டி, சீனிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags : Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்