இடையன்விளை அய்யா வைகுண்டசாமி பதியில் அகிலத்திரட்டு திருஏடு வாசிப்பு திருவிழா

நாசரேத், செப்.11: இடையன்விளை அய்யா வைகுண்டசாமி பதியில் அகிலத்திரட்டு திருஏடு வாசிப்பு திருவிழா வருகிற 13ம்தேதி தொடங்குகிறது.

நாசரேத் அருகே உள்ள இடையன்விளை அய்யா வைகுண்டசாமி பதியில் அகிலத்திரட்டு திருஏடு வாசிப்பு திருவிழா வருகிற 13ம்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. அய்யாவின் அருளாளர் ஐயன்சாமி தலைமை வகித்து விழாவை தொடங்கி வைக்கிறார். விழாவை முன்னிட்டு தினமும் மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பும் அன்னதர்மமும் நடக்கிறது. சாமித்தோப்பு முத்துநாயகம் குழுவினர் திருஏடு வாசிக்கிறார்கள்.
Advertising
Advertising

20ம்தேதி 8ம் திருவிழா இரவு 9மணிக்கு திருக்கல்யாண வாசிப்பு, அய்யா கல்யாண ஊர்வலம் நிகழ்ச்சி நடக்கிறது. 22ம்தேதி 10ம் திருவிழா பட்டாபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஒவ்வொரு வெள்ளி, ஞாயிறு மதியம் 2 மணிக்கு அய்யா அருள்வாக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை அய்யாவின் அருளாளர் ஐயன்சாமி செய்து வருகிறார்.

Related Stories: