நள்ளிரவில் பைக் எரிப்பு

புதுக்கோட்டை,செப்.11: புதுக்கோட்டை அருகே புது மாப்பிள்ளையின்  பைக் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை அருகேயுள்ள  முடிவைத்தானேந்தல் எம்.புதூர் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் நயினார்நாகராஜ்(26). இவர் தனியார் வங்கியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. அதிகாலையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் தீப்பற்றி எரிந்தது. நயினார்நாகராஜ் வெளியே வந்து பார்த்தபோது பைக் முழுவதும் எரிந்து கிடந்தது.

இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். எஸ்.ஐ. முத்துராஜா வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: