இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் சாத்தான்குளம் அருகே புதுமாப்பிள்ளை திடீர் மாயம்

சாத்தான்குளம், செப்.11: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள புதுக்குளம் காலனியைச் சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி தேவகனி. இவர்களுக்கு கிறிஸ்டோபர்(30) உள்பட 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இதில் 4 மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மூத்த மகன் கிறிஸ்டோபர், டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்துள்ளார். தூத்துக்குடி தெர்மல்நகர் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தகாரராக வேலை செய்து வருகிறார். இவருக்கும்  நெல்லை மாவட்டம் கூடன்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பேசி இன்று  (11ம்தேதி)  திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. திருமண வேலைகளில் இருவீட்டாரும் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

Advertising
Advertising

இந்நிலையில் மணமகன் கிறிஸ்டோபர், கடந்த 8ம்தேதி சாத்தான்குளத்தில் உள்ள சலூன் கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் புதுமாப்பிள்ளை திடீரென மாயமானதால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக கிறிஸ்டோபரின் தாய் தேவகனி, சாத்தான்குளம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குப்பதிவு செய்தார். காதல் பிரச்னை காரணமாக அவர் மாயமானாரா? அல்லது யாராவது கடத்தி சென்றனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று திருமணம் நடைபெற உள்ள நிலையில் மாப்பிள்ளை மாயமான சம்பவம் அப்பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: