திருச்செந்தூர் கோயில் விழாவில் பால்குடம் ஊர்வலம்

திருச்செந்தூர், செப்.11:  திருச்செந்தூர் சுப்பிரமணியபுரம் மாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.திருச்செந்தூர் சுப்பிரமணியபுரம் மாரியம்மன் கோயில் கொடை விழா கடந்த 8ம்தேதி கொடை விழா துவங்கியது. இரவில் மாரியம்மனுக்கு மாகாப்பு, சந்தனகாப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு அம்மன் கோயிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பலவகையான அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊர் நிர்வாக கமிட்டியினர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பொது மக்கள் செய்திருந்தனர்.

Related Stories: