கோவில்பட்டியில் 13ம்தேதி இஎஸ்ஐ குறை தீர்க்கும் முகாம்

கோவில்பட்டி, செப்.11: கோவில்பட்டியில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக கிளை அலுவலகம் சார்பில் இஎஸ்ஐ திட்டத்தில் உள்ள பயனீட்டாளர்களுக்கு ஏதாவது குறை இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இம்மாதத்திற்கான குறை தீர்க்கும் முகாம் கோவில்பட்டியில் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக கிளை (இஎஸ்ஐ) அலுவலகத்தில் வரும் 13ம்தேதி காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் பயனீட்டாளர்களுக்கு ஏதும் குறை இருப்பின் பங்கேற்று பயன்பெறலாம் என கிளை மேலாளர் தெரிவித்துள்ளார். முகாமில் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம் மருந்தக மருத்துவர் மற்றும் கிளை மேலாளர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Tags : ESI Reduction Camp ,Kovilpatti ,
× RELATED கோவில்பட்டி அருகே நீர்நிலைகளில் அரியவகை பறவை கணக்கெடுப்பு பணி