நேரு யுவகேந்திரா விருதுக்கு செப்.22க்குள் விண்ணப்பிக்க வேண்டும் ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு

காரைக்கால், செப்.11: காரைக்கால் மாவட்ட நேரு யுவகேந்திரா விருது பெற, வரும் செப்.22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பாரத் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், காரைக்கால் நேரு யுவகேந்திரா சார்பில், 201819 நிதி ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட இளைஞர், மகளிர் மனறத்திற்கு மாவட்ட அளவிலான விருது, ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.

இதற்கு கடந்த 1.4.18 முதல் 31.3.19 வரை மன்றம் செய்துள்ள சமூகப்பணியினை உரிய ஆதரங்களுடன் ஆவணமாக தொகுத்து வழங்க வேண்டும். குறிப்பாக, புகைப்படம், நாளிதழ், தொலைகாட்சி செய்திகளை இணைக்க வேண்டும். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் மன்றம் மாநில அளவிலான விருதுக்கும், மாநில அளவில் தேர்வு செய்யப்படும் மன்றம் தேசிய அளவிலான விருதுக்கும் பரிந்துரை செய்யப்படும். மன்றம் நேருயுவகேந்திர சட்டவிதிகள்படி பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட நேருயுவகேந்திராவில் பெற்றுகொண்டு, வருமம 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Tags :
× RELATED பாரதிதாசன் பல்கலை.யில்...