வடகரை திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா

நாகை, செப்.11:நாகை அருகே வடகரை திரவுபதியம்மன் கோயில் திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.நாகை காடம்பாடி பச்சை பிள்ளை குள வடகரை திரவுதியம்மன் கோயில் தீ மிதி திருவிழா கடந்த 2ம் தேதி பூச் சொரிதல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து அன்று முதல் பொறையார் வைத்தியலிங்க பாகவதர் குழுவினரால் மகாபாரத கதை சொற்பொழிவு தொடங்கியது.மகாபாரத கதையில் 2ம் தேதி தர்மர், கிருஷ்ணன், அப்பாள் பிறப்பும், 3ம் தேதி வில்வளைப்பு, திருக்கல்யாணமும், 4ம் தேதி சூதாட்டம், துகில் உரிதல், தபசு நாடகமும், 5ம் தேதி வனவாசம் மாடுபிடி சண்டை, 6ம் தேதி கிருஷ்ணன் தூது, 7ம் தேதி அரவான்களப்பலியும், 8ம் தேதி கர்ணன் மோட்சம் படுகளமும் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை தீ மிதி திருவிழா நடைபெற்றது. கோயில் அருகே அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றி கொண்டனர்.இன்று 11ம் தேதி மஞ்சல் நீராட்டு விழா, தர்மர் பட்டாபிஷேகத்துடன் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர், ஆலய நிர்வாகிகள், கிராமவாசிகள் செய்திருந்தனர்.


Tags : Vedakarai Thirupathiyamman Temple Themidhi Festival ,
× RELATED நாகை மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியது