மேட்டூர் அணையில் அதிக நீர் திறப்பு காவிரி, கொள்ளிடம் கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

நாகை, செப்.11:மேட்டூர் அணையில் இருந்து அதிக நீர் திறந்து விடப்படுவதால் காவிரி, கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.நாகை கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மேட்டூர் அணை தற்பொழுது முழு கொள்ளவை எட்டியுள்ள நிலையில் அதிகப்படியான உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே வெண்ணாறு, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கோட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை இன்றி குளிப்பதோ, நீச்சலடிப்பதோ, மீன் பிடிப்பதோ கூடாது என்றும் நீர் நிலைகளில் அருகே நின்றவாறு கைபேசியில் செல்பி எடுக்கவோ கூடாது என்றும் இதன் மூலம் கேட்டுக்கொள்ளபபடுகிறது. பெற்றோர்கள் குழந்தைகளை ஆறு, குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு அருகே செல்வதை தடுத்திடவும். சலவை தொழிலாளர்கள் நீர் நிலைகளில் பாதுகாப்பாக சலவை செய்திடவும், விவசாயிகள் கால்நடைகளுடன் நீர் நிலைகளின் வழியே கடக்க நேரிடும் போது கவனமாக கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு நாகை கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags : opening ,Mettur Dam ,
× RELATED ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பு